கேரளாவில், பிராங்கோ மூலக்கல் என்ற பாதிரியால் கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட வழக்கில், அந்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக இருந்த ஐந்து கன்னியாஸ்திரிகளில் ஒருவரான சகோதரி லூசி கலாபுரா, இதற்காக போராடினார். கத்தோலிக்க திருச்சபையின் உயர்மட்ட நீதித்துறை அமைப்பான அப்போஸ்டோலிகா இவரது முறையீட்டை நிராகரித்தது. வாடிகனும் இவரை விசாரிக்காமலேயே இவரது முறையீட்டை நிராகரித்தது. இதனையடுத்து, அவர் சர்ச்சிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார். இது குறித்த தனது வழக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அவர், ‘நானே என்னை இந்த நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை, ஏனெனில் எந்தவொரு வழக்கறிஞரும் எனது வழக்கை எடுத்துக் கொள்ள மாட்டார்கள், ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகமும் எனக்கு எதிராக திரும்பியுள்ளது. வேறு எந்த பெண்ணையும் இவர்கள் என்னைப்போல தெருவில் தூக்கி எறியக்கூடாது என்பதற்காகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என கூறினார்.