சர் தன் சே ஜூடா கோஷங்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் பிபாட் நகரில், ஈத் ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் ‘சர் தன் சே ஜூடா’ (தலையை வெட்டுவோம்) என கோஷங்களை எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இத்தகைய கோஷங்களை எழுப்ப கும்பலைத் தூண்டிய முக்கிய குற்றவாளியான ஜோத்பூரைச் சேர்ந்த ரோஷன் அலி கைது செய்யப்பட்டார். முன்னதாக, அகில இந்திய முஸ்லிம் ஜமாத் அக்டோபர் 8ம் தேதி ஒரு ஆணையை வெளியிட்டது, அதில் முகமது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலத்தின் போது ‘சர் தான் சே ஜூடா’ கோஷங்களை எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும், ஜோத்பூரில் உள்ள முஸ்ளிம்கள் இந்த ஆணைக்கு செவிசாய்க்கவில்லை.மேலும் வேண்டுமென்றே ஹிந்துக்கள் அதிகம் உள்ள பகுதியான நயாபுரா சுபாஷ் காலனி வழியாக செல்லும்போது சர்ச்சைக்குரிய இந்த முழக்கங்களை எழுப்பினர். அந்த காலனி மக்கள் பிப்பாட் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், ஹிந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது. ரோஷான் அலியை கைது செய்த காவல்துறையினர், கடந்த காலங்களிலும் அவர் இத்தகைய மதவாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

முன்னதாக, ஒரு சில மாத்ங்களுக்கு முன், பா.ஜ.கவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆதரித்ததற்காக, ராஜஸ்தானை சேர்ந்த அப்பாவி ஏழை தையல் தொழிலாளி கன்னையா லால், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த உமேஷ் கோஹ்லே உள்ளிட்ட சிலரை முஸ்லிம் மதவெறியர்கள் கொடூரமாக தலையை வெட்டியும் குத்தியும் கொன்றனர் என்பது நினைவு கூரத்தக்கது.

‘சர் தன் சே ஜூடா’ என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, முஸ்லிம்களின் கூற்றுப்படி, முஸ்லிம் மதத்தை அவமரியாதை செய்த முஸ்லிம் அல்லாதவர்களின் தலையை துண்டிக்கும் வன்முறை அழைப்பு அது. மக்களைக் கொல்லவும் பழைய கணக்குகளைத் தீர்க்கவும் அவர்கள் பயன்படுத்தும் இந்த கொலைக்கான அழைப்பு சமூக ஊடக இடுகைகளில் மதவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. முகமது நபியைப் பற்றி இடுகையிட்டதற்காகவோ அல்லது நபியைப் பற்றி ஏதாவது சொன்னவர்களுக்கு ஆதரவாகவோ கடந்த காலங்களில் பல அப்பாவி மக்களை அவர்கள் கொன்றுள்ளனர்.