தாய்லாந்து, துருக்கி, பாகிஸ்தான், பிரேசில், பிலிபைன்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சீனாவின் கொரோனா தடுப்பூசியான சினோவேக், கொரோனாவின் டெல்டா வகை வைரசை தடுக்க தகுதி இல்லாதது என தாய்லாந்தின் செஞ்சிலுவை சங்கம், தொற்று நோய்கள் சுகாதார அறிவியல் மையம் மற்றும் பயோடெக்கின் வைராலஜிஸ்ட் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சினோவேக்கை பயன்படுத்தும் நாடுகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே ஆய்வில், அஸ்ட்ராஜெனகாவின் 2 டோஸ் தடுப்பூசிகள், டெல்டா வைரசை எதிர்ப்பதில் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள், பாரதத்தில், ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் தயாராவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த மாதம், சீனாவின் நோய்கள் மற்றும் தடுப்பு மருந்துகள் ஆராய்ச்சியாளரான ஃபெங் ஜிஜியான் நடத்திய ஆய்வில், சீன தடுப்பூசிகளான சினோபார்ம் மற்றும் சினோவேக் ஆகியவை கொரோனாவின் டெல்டா வகை வைரசை எதிர்க்கும் திறனற்றவை என்று தெரிவித்தார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.