ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு

அப்தாப் பூனாவாலா, மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற ஹிந்து பெண்ணை தனது லவ் ஜிஹாத் வலையில் வீழ்த்தி டெல்லிக்கு அழைத்துச்சென்று வசித்து வந்தான். கடந்த ஆண்டு மே 18ம் தேதி ஷ்ரத்தா வாக்கரை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை 32 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்திருந்து, மூன்று வாரங்களாக நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீசியெறிந்தான். இந்த கொலை வழக்கு தேசமெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டெல்லி காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், இந்த லவ்ஜிஹாத் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கொலைகாரன் அப்தாப் பூனாவாலாவுக்கு டெல்லி முதல் துபாய் வரை பல தோழிகள் இருந்ததாகவும், அவருக்கும் ஷ்ரத்தாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட இதுவே முக்கிய காரணம் என்றும் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவ்வழக்கு குறித்து காவல்துறை முன்னர்தாக்கல் செய்த 6,629 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், ஷ்ரத்தா வாக்கர், தான் கொலை செய்யப்படலாம அல்லது உடல்ரீதியாக கடுமையாக தாக்கப்படலாம் என்ற பயத்தில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகும் அப்தாப் பூனாவாலா பல பெண்களுடன் டேட்டிங் செயலியான பம்பிள் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அதே டேட்டிங் ஆப் மூலம் தான், அவர் 2018ல் ஷ்ரத்தா வாக்கரையும் சந்தித்தார். ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்திருக்கும் அந்த சமயத்திலும் வீட்டுக்கு பல பெண் நண்பர்களை அழைத்து வந்துள்ளார். ஷ்ரத்தாவின் வெள்ளி மோதிரத்தை புதிய காதலிக்கு பரிசளித்தார். அப்தாப், தனது புதிய தோழிகள் வீட்டிற்கு வரும்போது, அவர் ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகளை குளிர்சாதன பெட்டியில் இருந்து அகற்றி சமையலறையிலும் மேல் அலமாரியிலும் சேமித்து வைப்பார். அவர்கள் வெளியேறிய பிறகு உடனடியாக குளிர்சாதன பெட்டியில் பாகங்களை மீண்டும் வைப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.