தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “உணவளிக்கும் விவசாயிகள் செழித்தால், உலகம் செழிக்கும். ஆனால், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2,500 ஆகவும், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 4,000 ஆகவும் ‘உயர்த்துவோம்’ என்று போலி தேர்தல் வாக்குறுதி கொடுத்தது தி.மு.க. ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, 3வது ஆண்டிலும், சற்றும் கவலையில்லாமல், விவசாயிகள் நலன் குறித்து எண்ணாமல், இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெற்று அறிவிப்புகள் கொடுத்து ஏமாற்றி இருக்கிறது. விவசாயிகள் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு திறனற்ற திமுக அரசு பதில் அளிக்குமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.