காசியில் உள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி கட்டடத்தின் ஆய்வுப் பணிகள் மூன்று நாட்கள் நடந்தபிறகு நேற்று முடிவடைந்தது. இந்த வழக்கில் ஆஜரான ஹிந்துக்கள் தரப்பு வழக்கறிஞர்கள் விஷ்ணு ஜெயின் மற்றும் ஹரி சங்கர் ஜெயின் ஆகியோர், ஞானவாபி வளாகத்தில் சிவலிங்கம் உள்ளது என்றும் அந்த சிவலிங்கம் 12 அடிக்கு 8 அங்குலம் விட்டம் கொண்டதாகவும், அது சரியாக நந்தி உள்ள திசையை நோக்கியே உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து, ஞானவாபி கட்டடத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க ஆதாரம் என்று கூறிய நீதிமன்றம், வளாகத்தை பாதுகாக்கவும், உள்ளே ஆட்கள் நுழைவதைத் தடுக்கவும் சி.ஆர்.பி.எப் பாதுகாப்பிற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த இடத்தைப் பாதுகாக்க மாவட்ட நீதிபதியும் காவல்துறை ஆணையரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறியது. முன்னதாக இந்த ஆய்வில் பங்கேற்ற விஸ்வ வேத சனாதன் சங்கத்தின் தலைவர் ஜிதேந்திர சிங் பிசென், மே 14ம் தேதி கணக்கெடுப்பை முடித்த பின்னர் ஊடகங்களிடம் பேசுகையில், வளாகத்திற்குள் நாங்கள் கற்பனை செய்ததை விட அதிகமானவை உள்ளன என தெரிவித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
செய்தி ஆதாரம்: https://www.opindia.com/2022/05/disputed-gyanvapi-structure-sealed-crpf-deployed-as-shivling-found-inside-during-survey/)