ஷியா முஸ்லிம்கள் தப்ப முடியாது

ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதை அடுத்து, ஆப்கனில் இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் முழுமையாக அங்கிருந்து அகற்றப்படுவர் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்ததனர். இதனையடுத்து, ஆப்கனில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. ஆப்கனில் கடந்த 8, 15 தேதிகளில் ஷியா மசூதிகளில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டனர். இந்த இரு குண்டுவெடிப்புகளுக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில், ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛உலகின் எந்தப் பகுதியில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்கள் எங்களிடம் இருந்து தப்ப முடியாது. அவர்கள் எங்களால் தாக்கப்படுவார்கள். குறிப்பாக, ஆப்கனில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். பாக்தாத் முதல் கோராசான் வரை இத்தாக்குதல்கள் தொடரும்’ என தெரிவித்துள்ளனர்.