திருணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஆலம், சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசியபோது, ‘‛நம் நாட்டில் உள்ள முஸ்லிம்களுல் 30 சதவீதம் பேர் ஒன்று சேர்ந்தால், பாரதத்தில் 4 பாகிஸ்தனை உருவாக்க முடியும். மீதமுள்ள 70 சதவீத மக்கள் எங்கு செல்வார்கள்? நாம் 30 சதவீதம், 70 சதவீதம் உள்ள அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்” என்றார். இந்தக் கருத்து, நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, பா.ஜ.க உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஷேக் ஆலமின் இந்தப் பேச்சுக்கு ஒரு கண்டனம்கூட முதல்வர் மமதா தெரிவிக்கவில்லை.