தொலைதூர வடக்கில் ஒரு மாகாணம் ஒன்றைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்குள்ள இமாம்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், 1998 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை அவர்கள் ஆட்சி செய்தபோது விதிக்கப்பட்ட சட்டங்களான, குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆணின் துணை இல்லாமல் பெண்கள் வெளியே செல்லக்கூடாது, பெண்களுக்கு பள்ளிப்படிப்பு கூடாது. ஆண்கள் தாடியை வைத்திருக்க வேண்டும், பச்சை, சிவப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது. இசை, ஆல்கஹால், புகைப்பழக்கம் தடை உள்ளிட்டவைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில் எந்த விதிமீறலும் குற்றம், அதற்கு கடுமையான தண்டனை உண்டு. மேலும், தலிபான் போராளிகள் திருமணம் செய்துகொள்ள ஏதுவாக இமாம்களும் முல்லாக்களுக்கும் உடனடியாக 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 45 வயதிற்குட்பட்ட விதவைகள் பட்டியலை அளிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆண்டபோது இந்த காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகள் உலக நாடுகள் மத்தியில் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகியது. எனவே, தற்போது இந்த சட்டங்களை அமல்படுத்துவதில் கடுமை காட்டமாட்டோம் என தலிபான்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், தற்போது அதனை அவர்கள் மீறியுள்ளனர்.