கல்லூரி முதல்வரை மிரட்டும் எஸ்.எப்.ஐ

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜாஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், கடந்த அக்டோபர் 25 அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாணவர் பிரிவான, இந்திய இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ) உடன் தொடர்புடைய குண்டர்கள் சிலர், காவல்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் முன்னிலையில் கல்லூரி முதல்வர் டாக்டர் பி. திலீப்புக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். திருச்சூர் மாவட்ட எஸ்.எப்.ஐ செயலாளர் ஹசன் முபாரக் தலைமையிலான அந்த ஐந்து குண்டர்கள் உதல்வர அறைக்குள் நுழைந்தனர். அப்போது ஹசன் முபாரக், “நான் உங்களுக்கு ஒன்று எச்சரிக்கை விடுக்கிறேன். இங்குள்ள மாணவர்களுக்கு எதிராக நீங்கள் தொடர்ந்து செயல்பட்டால், உங்கள் கால்களை உடைப்பேன். நாளை முதல் நீங்கள் பார்க்கப்போகும் இது முற்றிலும் புதிய விளையாட்டாக இருக்கும். நீங்கள் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறியதும் என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்” என்று மிரட்டினார். சுமார் 5 நிமிடங்களுக்கும் மேல் மிரட்டினார். அங்கு அப்போது ஒரு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உட்பட இரண்டு கவல்துறை அதிகாரிகள் இருந்தனர். என்றாலும் அனைவரும் வாய்மூடி பார்வையாளர்களாக மட்டுமே நின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையத்து, வேறு வழியினன்றி ஹசன் முபாரக் மற்றும் அவரது 5 கூட்டாளிகள் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றச்சாட்டின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. முன்னதாக, இதேபோல இடதுசாரி மாணவர் அமைப்பினர், கடந்த ஆகஸ்ட் மாதம், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள காரியவட்டம் அரசு கல்லூரி முதல்வரை ஒரு அறையில் அடைத்துவைத்து பூட்டினர். அந்த முதல்வரின் ஒரே தவறு என்னவென்றால், முந்தைய ஆண்டு பட்டப்படிப்பை முடித்த பிறகு, அதே பாடத்திட்டத்தில் எஸ்.எப்.ஐமாணவர் தலைவர் ஒருவரை மீண்டும் சேர்க்க மறுத்ததுதான். இதுகுறித்து தகவல் அறிந்து கல்லூரி முதல்வரை காப்பாற்றவந்த காவல்துறையினரை கல்லூரி வளாகத்திற்குள் நுழைய விடாமல் இடதுசாரி மாணவர்கள் தடுத்தனர். வன்முறையில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த லத்தி சார்ஜ் செய்ய வேண்டியதாயிற்று. கல்லூரியில் ஏற்பட்ட கலவரத்தில் கஜகூடம் உதவி கமிஷனர் உட்பட 4 காவலர்கல் காயமடைந்தனர்.