பசுக்கொலைக்கு கடுமையான தண்டனை

தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன், டையூ ஆகியவை ஒருங்கிணைந்த யூனியன் பிரதேச அரசு, பசுக்கொலைக்கு எதிரான தனது சட்டத்தில் கடுமையான விதிகளை விதித்துள்ளது. அப்பகுதி எல்லைக்குள் பசு, கன்று, மாடு, காளை, போன்றவற்றை இறைச்சிக்காக கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பசுவைக் கொல்வது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும். அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்ட விதிகளின்படி, இந்த குற்றங்களுக்கு ரூ. 5 லட்சம் வரை பண அபராதம் விதிக்கப்படும். 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்பு நோக்கங்களுக்காக விலங்குகளை கொண்டு செல்லும்போது உரிய அனுமதிகளைப் பெற வேண்டும். அனுமதியின்றி அவற்றை கொண்டு செல்வது விலங்குகளை வெட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டதாகக் கருதப்படும். ஏற்கனவே, இதுபோன்ற சட்டம் கோவா, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமலில் உள்ளது.