சேவாபாரதியின் மருத்துவ கிட்

சேவாபாரதி அமைப்பின் மூலம், நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ‘மருத்துவ பரிசோதனை கிட்’ வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய அகில பாரத சேவாபாரதி முதுநிலை துணைத் தலைவர் ரிஷபால் சிங் டட்வால், ‘ கொரோனா முதல் மற்றும் 2வது அலையின்போது சேவாபாரதி பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை தேசம் முழுவதும் செய்தது. கொரோனா 3வது அலையின்போது தொலைதூர கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களில் யாருக்கேனும் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், தேவையான மருத்துவ வசதிகள் செய்துத் தரப்படுகிறது. அதற்கான மருத்துவ பரிசோதனை கிட் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார். அவருடன் தென்பாரத அமைப்பாளர் பத்மகுமார், சேவாபாரதி மாநிலத் தலைவர், செயலாளர், ஏனைய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.