செந்தில் பாலாஜி நிரூபிக்க வேண்டும்

கோவை பந்த் அறிவிப்பு குறித்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒரு கட்சித் தலைமைக்குத் தெரியாமல் பா.ஜ.க மாவட்ட நிர்வாகிகள் பந்த் அறிவித்தனர். சரியாக வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள்? நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறை அல்ல. பா.ஜ.க மாநிலத் தலைவர் ஓர் அரசியல் கோமாளி. அவர் தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்” என கூறியிருந்தார். இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “சாராய அமைச்சருக்கு காதில் கோளாறு இருப்பதாக அறிகிறேன். ‘எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாமல் அறிவித்துவிட்டார்கள்’ என்று நான் சொன்னதாக பொய்களை கட்டவிழ்த்து விடும் சாராய அமைச்சர், அதை உடனடியாக நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் அதற்கு தண்டனையாக குறைந்தபட்சம் 100 மதுக் கடைகளையாவது மூட வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓட வேண்டும்” என் குறிப்பிட்டுள்ளார்.