மூத்த குடிமக்கள் நலத்திட்டங்கள்

மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர். வீரேந்திர குமார், ‘மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம், மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டம், ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா திட்டம், மூத்த குடிமக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் திறன் முயற்சிகள், முதியோர் பராமரிப்புக்காக பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியை முறைபடுத்துதல், மூத்த குடிமக்களின் நலனுக்கான விழிப்புணர்வு மற்றும் திறனை வளர்ப்பதற்கான திட்ட, அவற்றிற்கான பயிற்சி, விழிப்புணர்வு, உணர்திறன், மூத்த குடிமக்களுக்கான தேசிய உதவி எண் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனாவின் கீழ் 96,530 பேர் பயனடைந்துள்ளனர்’ என தெரிவித்தார்.