சுய உதவிக்குழு பயிற்சி

கிராமப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சூரிய சக்தி பயன்பாடு குறித்து 18 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கர்நாடக அரசு அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்க உள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, ஊரக குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து மகாத்மா காந்தி ஊரக ஆற்றல் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த பயிற்சி அளித்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், திடக்கழிவு மேலாண்மை, ஈரக் கழிவுகளில் இருந்து பல்வேறு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், மக்கும் கழிவுகளை நிர்வகிப்பதற்கான பயோ கேஸ், மாதவிடாய் கால ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் மேலாண்மை ஆகியவற்றை குறித்து சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இப்பயிற்சியில் அறிந்துகொள்வார்கள்.