கள்ளச் சந்தையில் விற்றால் சொத்துக்கள் பறிமுதல்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘மாநிலத்தில் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஸ்.ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும், அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். கான்பூர் மருத்துவக் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு (பி.ஐ.சி.யு) அமைக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் மாநில அரசு கொரோனாவின் இரண்டாவது அலைகளை முழுமையாக கட்டுப்படுத்தி விடும். கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் வேகம் அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் மேலும் அதிகரிக்கப்படும்’ என அறிவித்துள்ளார்.