டோக் பிசின் மொழியில் திருக்குறள்

பிரதமர் மோடி, தன் ஜப்பான் பயணத்தை முடித்து விட்டு, பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியா சென்றடைந்தார். அங்கு அவர் ‘டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். இது குறித்து, பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில், “பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. சுபா சசிந்திரன், சிறந்த பன்மொழி அறிஞராவார். குறளை டோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண கவர்னர் மற்றும் சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன். கவர்னர் சசிந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்று தேர்ந்துள்ளார்” என கூறியுள்ளார்.