புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சித்தானந்தா குருக்கள் கோயிலில் பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறப்பு அறையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது கொரோனா நோய்த் தொற்று குறைந்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்பாகவே புதுவையில் அனைத்து ஆன்மீக தலங்களும் திறக்கப்பட்டது. மருத்துவ படிப்பு மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் முலம் முழு பாடங்களை நடத்த முடியாது என்பதால், நேரடி வகுப்புகள் தொடங்க வேண்டும் என மருத்துவ கல்லூரியினர் கேட்டு கொண்டுள்ளனர். மருத்துவ மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் முதற்கட்டமாக மருத்துவ கல்லூரிகள் திறப்பத்தற்காக பரிசிலனை செய்து கொண்டிருக்கிறோம். கோரோனா நோய் தொற்றின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். பெற்றோரிடம் கருத்து கேட்ட பின்பே, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்’ எனவும் தெரிவித்தார்.