கல்வி கற்க செல்லும் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இது அனைவருக்கும் வருத்தத்தை அளிக்கிறது. இந்த நாட்டில் கல்வி கற்றுக் கொடுப்பவர்களுக்கு என்று ஒரு தனி மரியாதை உண்டு. தாய், தந்தையருக்கு அடுத்த இடத்தில் வைக்கப்படும் அவர்கள் இளஞ் சிறார்கள் முதல் வயது வந்தவர்கள் வரை குறிவைக்கும்போது நெஞ்சம் கொதிக்கிறது.
இதில் இன்னும் அதிக வருத்தம் தருவது மத ரீதியாக அவர்கள் வேறாக இருந்தால் நடவடிக்கை எடுக்க அரசு அமைப்புகள் தயக்கம் காட்டுவது. யாராக இருந்தால் என்ன, குற்றம் இழைத்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் எந்த மதத்தினராக இருந்தால் என்ன? கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீரவேண்டும்.
கீழ்கண்ட இணைப்பில் பல ஆண்டுகளாக சென்னையில் பீட்டர்ஸ் சாலையில் இயங்கும் ‘மியாசி ஆர்கிடெக்ச்சர் கல்லூரி’யில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பது புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூடி மறைக்கப்படுகிறது என்று புகார்கள் எழுந்துள்ளன. தலைமை இடத்தில் இருக்கும் 70 வயதான அன்வர் ஷரீப், தூயவன் கிருஷ்ணன் என்ற இருவர் மீதும் புகார் தரப்படுகிறது. தவிர, அவ்வப்போது வந்து செல்லும் சாலமன் என்ற பேராசிரியர் மாணவிகளுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய புகாரும் எழுந்துள்ளது.
இந்த புகார் வந்த ஓரிரு நாட்களில் இந்த கல்வி நிறுவனம், முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியளித்துள்ளது என்பது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா என எண்ணத் தோன்றுகிறது. புனித ஜார்ஜ் பள்ளியில் 2017ல் தந்த புகாருக்கு இப்போது ஏன் நடவடிக்கை என்று புரியவில்லை. இத்தனை நாட்கள் எல்லாரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? சிவசங்கர் பாபாவை கைது செய்ய அவசரம் காட்டும் காவல்துறை, விசாரணைக்கு நேரில் ஆஜராகாத அந்த ஆங்கிலோ இந்திய பள்ளி ஆசிரியர், நிர்வாகிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
மியாசி கல்லூரியை பற்றிய மொத்த புகாரும் கீழே உள்ள The Commune என்ற பத்திரிகையில் வந்துள்ளது. காம இச்சையுடன் அணுகும் எந்த மனிதரையும் எந்த பாகுபாடும் பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோள். https://thecommunemag.com/faculty-of-measi-academy-of-architecture-accused-of-sexual-harassment/
– நமது நிருபர்