குழந்தை பெற்றால் உதவித்தொகை

உலகமே மக்கள்தொகை பெருக்கத்தைப் பற்றியும் அதனால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் கவலை அடைந்துள்ளது. சமீபத்தில் உ.பி, அசாம் அரசுகள்கூட மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்காக புதிய வரைவு மசோதாவை தாக்கல் செய்தன. இந்நிலையில், கேரளாவில் பாலா மறைமாவட்டத்தில் உள்ள தேவாலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களில், ஐந்து மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்ற தம்பதிகளுக்கு மாதம் ரூ. 1,500 உதவித்தொகை வழங்கப்படும். அக்குழந்தைகளுக்கு மறைமாவட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும், மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பாலா மறைமாவட்ட குடும்ப நல இயக்கத்தின் பாதிரியார் ஜோசப் குற்றிங்கல் பேசும்போது, ‘கேரளாவில் கத்தோலிக்கர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவேதான், கத்தோலிக்கர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளோம்’ என்றார்.