சொல்வது ஒன்று செய்வது வேறு

‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற நடைபயணம் தொடர்பாக ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், “வெறுப்பு அரசியலுக்கும், பிரிவினைவாதத்துக்கும் எனது தந்தையை இழந்தேன். ஆனால் அதேபோல் அதே சக்திகளுக்கு எனது தேசத்தை இழக்க மாட்டேன். வெறுப்பை நிச்சயமாக அன்பு வெல்லும். நம்பிக்கை அச்சத்தை தோற்கடிக்கும். இணைந்தே நாம் இதை வெல்வோம்” என்று பதிவிட்டுள்ளார். ஆனால், காங்கிரஸ் காலத்தில் தான் பாரதம் துண்டுகளாக உடைக்கப்பட்டது, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது, சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்தது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் நமது ராணுவத்தினர் தேவையே இல்லாமல் ஈடுபடுத்தப்பட்டனர், பலர் இதனால் உயிரிழந்தனர். இலங்கையில் ராஜீவ் காந்தி ஊதி பெரிதாக்கிய பிரிவினைவாதம்தான் இறுதியில் அவரை கொன்றது. இலங்கையின் பிரிவினைவாதிகளை உரமிட்டு வளர்த்தது காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும்தான். தனது அரசியல் ஆசை காரணமாக எமர்ஜென்சி சட்டத்தை பிறப்பித்து ஒட்டுமொத்த தேசத்தையும் சிறைச்சாலையாக்கி கொடுமைப்படுத்தியவர் இந்திரா காந்தி. அதுமட்டுமில்லாமல், இன்றுவரை பாரதத்தில் பிரிவினைவாதம், வெறுப்பு அரசியல், வாக்குவங்கி அரசியியல் போன்றவற்றை வளர்த்து வருவதும் இதே காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும்தான். பாரதம் ஒரே நாடு அல்ல, பல மாநிலங்களின் கூட்டு என பிரிவினைவாதம் பேசியவர்தான் இந்த ராகுல். இதே கருத்தை வலியுறுத்தி வரும் மற்றொரு கட்சி அதன் கூட்டணியில் உள்ள தி.மு.க. ஆனால், இன்று அவர்கள் தான் பாரதத்தை ஒன்றிணைப்போம் என போலி அரசியல் விளையாட்டுகளை நடத்தி வருகின்றனர்.