சாவர்க்கர் கௌரவ யாத்திரை

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தகுதி இழப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் கந்தி, “நான் சாவர்க்கர் அல்ல; ராகுல் காந்தி. மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று கூறியிருந்தார். இதற்கு பா.ஜ.கவினர், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி, சிவசேனா (உத்தவ் தாக்கரே) அணி, உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சாவர்க்கரின் பேரன், வார சாவர்க்கர் மன்னிப்பு கேட்டார் என்பதற்கான ஆதாரத்தை ராகுல் காட்ட வேண்டும் அல்லது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் கூறியிருந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் ராகுல் இந்த விஷயம் குறித்து பேச வேண்டாம் எனவும் கூறியிருந்தார். இதனால், ராகுல் விட்ட அம்பு அவரது முதுகிலேயே குத்தி ரணப்படுத்தியது. இந்நிலையில், பா.ஜ.கவும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியும் இணைந்து ‘வீர சாவர்க்கர் கௌரவ யாத்திரை’யை நேற்று முதல் துவங்கியுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், “வீர சாவர்க்கரின் வரலாற்றையும், பங்களிப்பையும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ‘சாவர்க்கர் கௌரவ யாத்திரை’ ஏப்ரல் 6 வரை நடத்தப்படவுள்ளது. இந்த யாத்திரை மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது இரண்டு முக்கிய நகரங்களில் யாத்திரை நடைபெறும் இந்த யாத்திரையில், ஒரு கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள். இரண்டு முறை ‘காலா பானி’ என்ற மிகக் கடுமையான சிறை தண்டனைக்கு உள்ளான சாவர்க்கர், ஏராளமான சமூகத் தொண்டிலும் ஈடுபட்டவர். 500க்கும் மேற்பட்ட கோயில்களில் பட்டியலினத்தவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர். அவரது வரலாற்றை மறைக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சாவர்க்கரின் பங்களிப்புகளையும், வரலாற்றையும் அனைத்துத் தரப்பு மக்களிடம் கொண்டு செல்வதே இந்த யாத்திரையின் முக்கிய நோக்கம்” என கூறினார்.