வர்க்கர் நினைவிடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “வீர் சாவர்க்கர் அவமதிக்கப்படுவதை மகாராஷ்டிரா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. மகாராஷ்டிராவின் அடையாளமான வீர் சாவர்க்கர் தொடர்ந்து அவமதிக்கப்படுவதை உத்தவ் தாக்கரே வேடிக்கை பார்க்கிறார். காங்கிரஸ் கட்சியிடம் அவர் மென்மையான போக்கை கடைபிடிக்கிறார். வீர் சாவர்க்கரை ‘மாஃபி வீர்’ என்று இகழ்கின்றனர். மன்னிப்புக் கடிதம் எழுதிய மாஃபி வீர் என்று சாவர்க்கர் அவமதிக்கப்படுவதை கூட்டணிக்காக வேடிக்கை பார்க்கிறார் உத்தவ் தாக்கரே” என்றார். அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்தபோது அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்றும், பின்னாளில் பிரிட்டிஷ்காரர்களுடன் இணைந்து காங்கிரஸுக்கு எதிராக செயல்பட்டார் என்பதும் ராகுல் காந்தி தொடர்ச்சியாக முன்வைத்து வரும் பொய்யான விமர்சனத்தை ஒட்டி ஏக்நாத் ஷிண்டே இவ்வாறு தெரிவித்துள்ளார்.