கேரளாவில் ஹிந்து, கிறிஸ்தவ பெண்களை மதம் மாற்றும் முஸ்லிம் மதக்கல்வி மையமான மஞ்சேரியில் உள்ள ‘சத்தியசரணி’யில் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக ஜனம் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்புலர் பிரண்டின் கீழ் சத்யசரணியில் நூற்றுக்கணக்கான ஹிந்து, கிறிஸ்தவ சிறுமிகள், பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இங்கு மதமாற்றம் செய்யப்பட்ட பலரும் பயங்கரவாத அமைப்புகளுக்குச் சென்றுள்ளதாக புலனாய்வு அமைப்புகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை காதல் என்ற போர்வையில் சிக்க வைத்து சத்தியசரணிக்கு அழைத்து வந்து மதமாற்றம் செய்வதே ஜிஹாதிகளின் நோக்கம். சத்யசரணி என்பது காவல்துறை கூட எளிதில் நுழைய முடியாத இடம். சத்யசரணியில் நடக்கும் நடவடிக்கைகள் மர்மமாக இருப்பதாகக் கூறி ஹிந்து அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தியுள்ளன.
2016ம் ஆண்டில், திருவனந்தபுரத்தில் உள்ள ராணுவ அதிகாரியின் 21 வயது மகளை சத்தியசரணியில் இருந்து காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அப்போதைய ஏ.டி.ஜி.பி பி.சந்தியா உத்தரவின் பேரில், சத்யசரணியில் காவலர்கள் சோதனை நடத்தினர். இதில் பல ஹிந்து மற்றும் கிறிஸ்தவ சிறுமிகளை மதமாற்றம் செய்த பதிவுகளை கைப்பற்றினர். இந்த சோதனையில் கண்ணூரில் உள்ள பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பி.ஏ.எம்.எஸ்., மாணவி உள்ளிட்ட பலரின் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சத்யசரணியில் மதமாற்றம் செய்யப்பட்டு தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் நிமிஷா, சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளார். சத்யசரணியில் ஹிந்து, கிறிஸ்தவ பெண்களை மதம் மாற்றிய பின், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவார்கள் என மற்றொரு ஹிந்து பெண் அதிரா உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். பாப்புலர் பிரண்ட் மகளிரணி தலைவி ஜைனபா தலைமையில் இங்கு இதுபோன்ற பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிரா தெரிவித்தார்.
வைக்கம் பகுதியைச் சேர்ந்த தனது மகள் அகிலாவை மதமாற்றம் செய்ததில் சத்யசரணியின் பங்கு முக்கியமானது என்று மற்றொரு பெண்ணின் தந்தை அசோகன் காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த லவ் ஜிஹாத் மதமாற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் காசர்கோட்டைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பெண்களாவர்.
பாப்புலர் பிரண்ட் மையங்களில் என்.ஐஏ. நடத்திய சோதனையில் திடுக்கிடும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட சூழலில், மஞ்சேரியில் மத மாற்றத்தின் மூலம் சமூகக் குழப்பத்தை ஏற்படுத்தும் முஸ்லிம் மதமாற்ற மையமான சத்தியசரணிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தற்போது வலுத்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு துணைபோகும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் சத்யசரணி மீதும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.