கேரளாவில் உள்ள எடப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஒருவர் சமஸ்கிருதத்தை பாடுவதன் மூலம் கற்பிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பரிசோதனை முயற்சி சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் திரைப்படப் பாடல்களுடன் கவிதைகளையும் பாடி, தாள முறை மற்றும் ஆளுமை ஆகியவற்றை விளக்குகிறார். அவர் 2005ல் திருப்புனித்துறா சமஸ்கிருத மேல்நிலைப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்தபோது ‘தீரே சேரிய சப்தங்கள்’ மூலம் இந்த சோதனை முயற்சியை தொடங்கினார். வைலோப்பிள்ளியின் ‘காக்கா’, வயலாரின் ‘அஸ்வமேதம்’ போன்ற பல கவிதைகளையும் அவர் சமஸ்கிருதத்தில் தொகுத்து வழங்கியுள்ளார். இரிஞ்சாலக்குடாவில் உள்ள சமஸ்கிருத ஆசிரியர்களின் இணையதளமான நவவாணியில் இந்த பாடல்கள் உள்ளன. தற்போது இவர் இத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இவரிடம் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய புத்தகத் தொகுப்புகள் உள்ளன. இதைத்தவிர, அவரிடம் 2,000 புத்தகங்களும், 8,000 புத்தகங்களின் டிஜிட்டல் பிரதிகளும் உள்ளன.