ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள யு சோசோ தாம் ஆடிட்டோரியத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பார்வையாளர்களிடம் அவர் உரையாற்றுகையில், பிறப்பால் தேசபக்தராக இருந்த சங்க நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடர்பான பல்வேறு எழுச்சியூட்டும் சம்பவங்களை விவரித்தார். உதாரணமாக, சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி சிறையில் அடைக்கப்பட்டார் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார். இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, டாக்டர் ஹெட்கேவார் சிறையில் அடைக்கப்பட்ட அவரது அசல் பேச்சை விட, நீதிமன்றத்தில் அளித்த பதில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தேசத்துரோகமானது என்று தெரிவித்தார் என்ற சம்பவத்தை சுவாரஸ்யமாக எடுத்துரைத்தார்.
மேலும், “நாம் பழங்காலத்திலிருந்தே ஒரு பழமையான தேசமாக இருக்கிறோம். ஆனால் நமது நாகரீக குறிக்கோள் மற்றும் மதிப்புகளை மறந்ததால் நாம், நமது சுதந்திரத்தை இழந்தோம். ஆன்மீகத்தில் உள்ள நமது பழங்கால மதிப்பின் மீதான நமது உள்ளார்ந்த நம்பிக்கையே ஒருவருக்கொருவர் பிணைக்கும் சக்தியாகும். நமது தேசத்தின் நித்திய நாகரிகத்தின் இந்த விழுமியங்கள் நம் தேசத்திற்கு வெளியே உள்ளவர்களால் ஹிந்துத்துவா என்று பெயரிடப்பட்டது. நாம் ஹிந்துக்கள், ஆனால் ஹிந்து என்பதற்கு குறிப்பிட்ட வரையறை எதுவும் இல்லை, அது நமது அடையாளம். பாரதிய மற்றும் ஹிந்து என்ற இரண்டு சொற்களும் ஒத்த சொற்கள். இது உண்மையில் ஒரு புவி, கலாச்சார அடையாளம்.
தனிமனித சுயநலத்தை விட்டுக்கொடுத்து நாட்டுக்காக தியாகம் செய்ய சங்கம் நமக்கு கற்பிக்கிறது. ஒரு மணி நேர சங்க ஷாகாக்களில், இந்த நற்பண்புகள் மற்றும் தாய்நாட்டிற்கான கடமைகள் பற்றி மக்கள் கற்றுக்கொள்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இந்த தேசத்தின் பண்டைய வரலாற்றில் இருந்து இந்த தியாகப் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டுகிறது. நம் முன்னோர்கள் ஜப்பான், கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அங்கெல்லாம் இதே மதிப்புகளை பரப்பினர். இன்றும் அதே பாரம்பரியத்தை நாம் பின்பற்றி வருகிறோம்” எனறு கூறிய மோகன் பாகவத், கொரோனா நெருக்கடியின் போது, பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்புவதன் மூலம் பாரதம் மனித குலத்திற்கு எவ்வாறு சேவையாற்றியது என்பதையும், இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடியின் போது நமது நாடு இலங்கையுடன் எவ்வாறு துனை நிற்கிறது என்பதையும் எடுத்துக்காட்டினார்.
1925ம் ஆண்டு முதல் தேசிய மறுசீரமைப்புப் பணிகளில் அர்ப்பணிப்புள்ள ஸ்வயம்சேவகர்களின் உதவியுடன் ஐந்து தலைமுறைகளாக சங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விலக்கிய மோகன் பாகவத், “சங்கம் என்பது அமைப்பை வலுப்படுத்துவதற்காக உழைக்கும் மற்றுமொரு அமைப்பு அல்ல, இந்த சமூகத்தை ஒழுங்கமைக்கச் செய்வதே அதன் உண்மையான நோக்கம். பாரதம் தனது அனைத்துத் துறை வளர்ச்சியை அடைய வேண்டும். அதை அடைய ஸ்வயம்சேவகர்கள் ஷாகாவில் உள்ள வேலை செய்யும் முறையிலிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். சங்கத்தின் நோக்குநிலை தினசரி அடிப்படையில் அதைச் செய்வதன் மூலம் ஒருவரின் சொந்த பழக்கமாக அதை ஆழப்படுத்துவதாகும். ஆர்.எஸ்.எஸ்ஸை தொலைவில் இருந்து அல்ல, நேரடியான கவனிப்பு மூலம் நீங்கள் ஆய்வு செய்யுங்கள்” என எடுத்துரைத்தார்.
“ஒரு குடிமகனின் தலைவிதி நாட்டின் தலைவிதியால் தீர்மானிக்கப்படுகிறது அதற்கு நேர்மாறாக நாட்டின் தலைவிதி குடிமகன்களின் தலைவிதியாலும் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு உகாண்டா நெருக்கடியின் போது, அங்குள்ள பாரத நாட்டினரும் அவதிப்பட்டனர். இத்தனைக்கும் இதில் அவர்களின் தவறுகள் ஏதுமில்லை. ஆனால் அப்போது உலக அரங்கில் பாரதத்தின் அந்தஸ்து பலவீனமாக இருந்தது. நமது நாடு பலவீனமான நிலையில் இருந்ததால் நமது எதிர்ப்புகள் அந்த நேரத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பாரத தேசம் சக்திவாய்ந்ததாகவும் செழிப்பாகவும் மாறும்பொழுது தானாகவே ஒவ்வொரு பாரத தேசத்தவரும் சக்திவாய்ந்தவராகவும் செழிப்பானவராகவும் மாறுகிறார்” என கூறினார். இக்கூட்டத்தில், கல்வியாளர்கள், தலைவர்கள், ஆன்மீக மற்றும் சமூக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.