மத்திய அரசு சந்தேஷ் என்ற உடனடி செய்தி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மக்களவையில் கூறுகையில், ‘ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின்படி மத்திய அரசு பாரதத்திலேயே முழுமையாக உருவாக்கப்பட்ட இந்த செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒரு ஓப்பன் சோர்ஸ் அடிப்படையிலான, பாதுகாப்பான, மேகக்கணினி இயக்க தளம், இதில் வாட்ஸ்ஆப் போன்றே தனி செய்தி, குழு செய்தி, கோப்புகள், ஊடக பகிர்வு, ஆடியோ வீடியோ அழைப்பு போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் இ-கவர்னன்ஸ் ஒருங்கிணைப்பும் இதில் உள்ளது. கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. ஆனால் சந்தேஷ் செயலி, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஏஜென்சிகள் மத்தியில் உள்நாட்டில் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது’ என்று அவர் தெரிவித்தார்.