புதிய வாடகை, குத்தகை சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது.அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுடன் அதனை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பியுள்ளது.இதனை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், புதிய சட்டங்களை இயற்றுவது அல்லது ஏற்கனவே உள்ள வாடகைச் சட்டங்களைத் திருத்திக்கொள்ளலாம்.இச்சட்டம், நாடு முழுவதும் உள்ள வாடகை வீடுகள் தொடர்பான சட்ட கட்டமைப்பை மாற்றியமைக்க உதவும், இது அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியைத் தூண்ட உதவும். மேலும், இந்த மாதிரி வாடகைச் சட்டம் நாட்டில் ஒரு துடிப்பான, நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வாடகை வீட்டு சந்தையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அனைத்துவகை வருமானப் பிரிவினருக்கும் போதுமான வாடகை வீட்டு வசதிகளை உருவாக்க உதவும்.வீடு வாடகை விடும் முறையை முறையான சந்தைப்படுத்துதல் வழியாக நிறுவனமயமாக்கவும் இது உதவும்.