காங்கிரஸ் மூத்த தலைவரான சல்மான் குர்ஷீத், ‘சன்ரைஸ் ஓவர்அ யோத்யா’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் ராம ஜென்மபூமி விவகாரத்தில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடிப்படையாக வைத்து, இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இதில், ‘காவிவானம்’ என்ற தலைப்பில் அவர் சனாதன தர்மம் எனப்படும் ஹிந்துமதம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முனிவர்களாலும், துறவிகளாலும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அதன் புனிதத்தை ஹிந்துத்வா கொள்கைகள் சீரழித்துவிட்டன. ஹிந்துத்வாவின் அரசியல் பதிப்பும், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளும் ஒன்றேதான்’ என்று கூறியுள்ளார். ஹிந்துத்வா என்றால் என்ன என்ற அடிப்படைகூடத் தெரியாமல் அவர் எழுதியுள்ள இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி காவல் துறையில் சல்மான் குர்ஷித் மீது, வழக்கறிஞர்கள் வினீத் ஜிண்டால், விவேக் கார்க் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.