முன்பெல்லாம் உணவில் எச்சில் துப்பி சமைப்பது என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதாக தெரிய வந்துக்கொண்டிருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக, இப்படி உணவில் எச்சில் துப்பி தயாரிப்பது கண்டுபிடிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், காஜியாபாத்தில், முகமது மொஹ்சின் ஒரு நிச்சயதார்த்த விழாவில் உணவு தயாரிக்கும்போது அதில் எச்சில் துப்பி ரொட்டிகளை உருவாக்கும் வீடியோ வெளியானது. காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யும்போது, கடந்த 5 ஆண்டுகளாக, முஸ்லிம் அல்லாதவர்களுக்காக செய்யும் சமையல்களில் தான் துப்புவதாக ஒப்புக்கொண்டுள்ளான். இதேபோல, ரொட்டி மீது துப்பிய மற்றொரு விவகாரத்தில் டெல்லியை சேர்ந்த முகமது காலிக் கைது செய்யப்பட்டான். இதே போல வேறு ஒரு வழக்கில் முகமது இப்ராஹிம் மற்றும் அன்வர் என்ற இருவரை காவல்துறை கைது செய்தது. மீரட்டில், அரோமா கார்டனை சேர்ந்த நௌஷத் என்பவனும் இதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளான். இவர்கள், முஸ்லிம் அல்லாத ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் போன்ற மாற்று மதத்தினருக்காக தயாரிக்கும் உணவில் மட்டுமே இப்படி எச்சில் துப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.