சபாஷ் அமர் சித்ர கதா

அமர் சித்ரா கதா என்ற பிரபல குழந்தைகளுக்கான கதை தயாரிப்பு நிறுவனத்தில் பயிற்சியாளராக இணைந்த அபு அமான் என்பவர் ஹிந்துக்களின் புனிதமான கோயில்களில் உள்ள தேவியின் சிற்பங்களுடன் ஆபாசமாக நடந்துகொண்டதை தன் ட்விட்டரில் பதிவிட்டார். இதனால் அபு அமனின் ஹிந்து விரோத கருத்து வெளிப்பட்டது. இந்த விஷயம் சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதனையடுத்து இந்த விஷயம் அமர் சித்ர கதா நிறுவனத்துக்கு தெரிய வந்தது. இதனால் அவர் பணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த அந்த நிறுவனம், தொழில் மற்றும் நெறிமுறைகளில் மிக உயர்ந்த தரத்தை தாங்கள் கடைபிடித்து வருவதாகவும் இதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் தங்கள் நிறுவன கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதால் அமான் நீக்கப்பட்டதாகவும் அமர் சித்ர கதா நிறுவனம் தெரிவித்துள்ளது.