கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயிலில், வயதுவரம்பின்றி அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று 2018ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினையடுத்து, அதனை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டங்களை கைது, தடியடி, வழக்குப் பதிவு என கேரள அரசு மிகக்கடுமையாக கையாண்டது. பெண்களை வேண்டுமென்றே கோயிலுக்கு அழைத்துச் செல்ல கீழ்த்தரமான முயற்சிகளையும் முன்னெடுத்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கேரள தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன், ‘சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக நிகழ்ந்த சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார். இதற்குப் பதில் அளித்துள்ள பா.ஜ.க தலைவர் சுரேந்திரன், ‘சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஓட்டுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் அவர்கள், கங்கையில் குளித்தாலும் செய்த பாவம் போகாது’ என கூறியுள்ளார். ‘பினராயி விஜயனும், இந்த விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.