ரூபாய் மதிப்பு சரியவில்லை

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “பாரத ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏனெனில், வலுவடைந்து வரும் அமெரிக்க டாலருக்கு எதிராக அனைத்து நாடுகளின் பணமும் சரிந்து வருகிறது. அந்த நாட்டு பணத்தை ஒப்பிடுகையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வலுவாகவே உள்ளது. வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் பணத்துடன் ஒப்பிடும்போதும் ரூபாய் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. பாரதத்தின் பொருளாதாரத்தின் அடித்தளம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் சிறப்பாக உள்ளது. இதனால் பணவீக்கம் நிர்வகிக்கும் அளவில் தான் உள்ளது என நான் தொடர்ந்து கூறி வருகிறேன்’ என்றார்.