வதந்தியை பரப்பும் தாராளவாதிகள்

ஏப்ரல் 22 அன்று, பாரதம் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள ஹிந்துக்கள் மற்றும் ஜைனர்கள் அக்தி அல்லது ஆகா தீஜ் என்றும் அழைக்கப்படும் அட்சய திரிதியை தினத்தின் மங்களகரமான நிகழ்வைக் கொண்டாடினர். பொதுவாக ஹிந்துக்களின் பண்டிகைகள் எல்லாம், நட்சத்திரம், திதி, சூரிய சந்திர நகர்வுகள் போன்ற பல்வேறு மிக நுணூக்கமான, ஜோதிட அறிவியல், ஆன்மீகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பழங்காலத்தில் இருந்து தொன்றுதொட்டு கடைபிடிகப்பட்டு வருகிறது. அக்ஷயா என்பது சமஸ்கிருதச் சொல்லுக்கு அழியாதது என்று பொருள். அட்சய திரிதியை நாளுடன் தொடர்புடைய பல இதிகாச புராண சம்பவங்கள் உள்ளன. இந்த நாளில் நல்ல செயல்கள் நித்திய வெற்றியையும் மகிழ்ச்சியையும் தருவதாக நம்பப்படுகிறது. ஹிந்துக்கள் இந்த நாளில் தான் பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பகவான் பரசுராமரின் பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். மேலும், மகரிஷி வியாசர் கூறிய மகாபாரதத்தை விநாயகர் எழுதத் தொடங்கிய நாள். வனவாசத்தின் போது பாண்டவர்களின் பசியைப் போக்க, ஸ்ரீ கிருஷ்ணர் ‘அட்சய பாத்திரம்’ வழங்கிய நாள், சுதாமா கிருஷ்ணரை துவாரகையில் சந்தித்த தினம். திரேதா யுகமும் துவங்கிய தினம், புனித நதியான கங்கை பூமியில் அவதரித்த புண்ணிய நாள், என கொண்டாடப்படுகிறது. ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவர் இந்த நாளில் தான் பிறந்தார் என்று சமணர்கள் நம்புகிறார்கள். ஜைனர்கள் இந்த நாளில் விரதம் அனுசரிக்கிறார்கள். இப்படி பல சம்பவங்களுடன் தொடர்புள்ள அட்சய திருதியை தினத்தை சமூக பதட்டத்தை உருவாக்கும் நோக்கில், திரித்துக் கூறி பொய்களை பரப்பி வருகின்றனர் சில தாராளவாதிகள். “ஹிந்துக்கள் முஸ்லிம்களை கேலி செய்ய மட்டுமே அட்சய திரிதியை மற்றும் பரசுராமர் தினத்தை கொண்டாடுகின்றனர். ஹிந்துக்கள், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பண்டிகைகளின்போது அந்த ஆண்டு நாட்காட்டியை பயன்படுத்தி அப்போதுள்ள ஹிந்து பண்டிகைகளைக் கண்டுபிடிப்பார்கள். இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தை முஸ்லிம்களின் ஈத் பண்டிகையுடன் இணைத்துள்ளனர்” என பல சர்ச்சைக்குரிய பதிவுகளை அவர்கள் சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே பரப்பினர். சரி, இந்த ஆண்டு, அட்சய திருதியை தினத்தன்று ரம்ஜான் சேர்ந்து வந்துவிட்ட ஒரு காரணத்தால் பொய்களை பரப்பும் சாக்குபோக்கு இவர்களுக்கு கிடைத்துவிட்டது. ஆனால் அடுத்த ஆண்டு, மே 10 அன்று அட்சய திருதியை கொண்டாடப்படும், ஈத் ஏப்ரல் 10 தேதிகளில் எங்கோ வரும். அப்போது ஹிந்து பண்டிகைகள் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த தாராளவாதிகள் என்ன சாக்கு சொல்வார்கள்? என்பது தான் கேள்வி.