மனித கடத்தலில் ரோஹிங்கியாக்கள்

மேற்கு வங்கம் கொல்கத்தாவில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களான முகமது ஜமீல், நூர் அமீன் க்களைஎன்ற இருவரை உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏ.டி.எஸ்) கைது செய்துள்ளது. இவர்களிடம் இருந்து இரண்டு பாஸ்போர்ட்கள், எட்டு ஆதார் அட்டைகள், மூன்று வாக்காளர் அடையாள அட்டைகள், மூன்று பான் கார்டுகள் மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினரை சட்டவிரோதமாக பாரதத்தில் வரவழைத்து அவர்களுக்கு போலி ஹிந்து பெயர் அடையாள அட்டைகளை தயாரித்துக் கொடுத்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளனர். மேலும், போலி இந்திய பாஸ்போர்ட்டையும் தயாரித்தளித்து மத்திய கிழக்கு நாடுகள், தென்னாப்பிரிக்கா, காங்கோ உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி சர்வதேச மனிதக் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.