தேச விரோதிகளை ஆதரிக்கும் ஆர்.ஜே.டி

பீகார் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்புடன் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவ்வழக்கை தற்போது என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. பி.எப்.ஐ மற்றும் அதன் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகங்களில் என்.ஐ.ஏ. தீவிர சோதனை மேற்கொண்டது. இவ்வழக்கில் 25 பேருக்கும் மேலானவர்களுக்கு தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணி நடந்தி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் ஜகதானந்த் சிங், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்த்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்காகவே பி.எப்.ஐ. அமைப்பு நிறுவப்பட்டது. அவர்களை ஏன் கலவரக்காரர்கள் எனவும் தேச விரோதிகள் என்றும் அழைக்கிறீர்கள்? பாதுகாப்பு நிறுவனங்களால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஏஜெண்டுகளில் பெரும்பாலானவர்கள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களாக இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள தங்கள் உறவினர்களிடம் முஸ்லிம்கள் பேசுவது தேசவிரோத செயலாக கருதப்படுவது ஏன்? பாகிஸ்தானை சேர்ந்தவர்களிடம் போனில் பேசுபவர்கள் தேச விரோதிகள் என்று குற்றம்சாட்டப்படுகிறார்கள்” என எவ்வித ஆதாரமும் இன்றி குற்றம் கூறினார். ஜகதானந்த் சிங்கின் அடிப்படை ஆதாரமற்ற இத்தகைய கருத்துகளுக்கு, பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. தேச விரோதிகளுக்கு ஆதரவாக பேசும் இவரை போன்றவர்கள் மீது தேச விரோத வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பா.ஜ.க சட்டமேலவை உறுப்பினர் சந்தோஷ் சிங் தெரிவித்துள்ளார்.