வெவ்வேறு தடுப்பூசிகள் ஆபத்து

உலக சுகாதார அமைப்பினுடைய விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கொணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘பல நாடுகளில் கொரோனா 2வது அலை முடிவுக்கு வரவில்லை. அதற்குள் 3வது அலை பற்றிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக இரண்டு வெவ்வேறான நிறுவனங்களின் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம் என பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்திவிடும். இது குறித்த தரவுகள் நம்மிடம் இல்லை. 2வது, 3வது, 4வது டோஸ் தடுப்பூசிகளை எப்போது யார் போட்டுக்கொள்வது என்று மக்கள் தீர்மானிக்கத்தொடங்கினால், அது நாடுகளை குழப்பமான நிலைக்கு தள்ளிவிடும். இது பற்றிய ஆய்வுகள் நடைபெறுகிறது. அதுவரை அனைத்து நாடுகளும் பொறுமை காக்க வேண்டும்’ என கூறினார்.