உலக வங்கி, கேரளாவை அதிக கடன் வாங்குவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பல துறைகளில் தனியார் முதலீட்டைக் கொண்டுவருமாறு மாநிலத்தை வலியுறுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய தெற்காசிய நாடுகளுக்குப் பொறுப்பான உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், கேரளா, அதன் அதிகரித்து வரும் கடன்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பொதுத்துறை நிதியை தேவையான இடங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்ததுடன், அரசு, அதற்குப் பதிலாக தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், அரசு தலையீடு உள்கட்டமைப்பு மற்றும் விநியோகத்தில் மட்டுமே இருக்க வேண்டும். திடீர் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க, காலநிலை மாற்றத்தை சமாளிக்க கேரள மாநிலம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார். உலக வங்கியிடமிருந்து 350 மில்லியன் டாலர்களை கடனாக வாங்க கேரளா முயற்சிக்கிறது. இது, கேரளாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கூடுதல் உதவியாக 150 மில்லியன் டாலர்களும், கேரள பொருளாதார மறுமலர்ச்சி திட்டத்திற்கு 165 மில்லியன் டாலர்களும் அடங்கும் என கூறப்படுகிறது.