வி.ஆர் ஹெலிகாப்டரில் சவாரி செய்யலாம்

ஒரு அருங்காட்சியகத்திற்குள்ளாக ஹெலிகாப்டரில் சவாரி செய்து  அங்கு பாரதத்தின் கடந்த காலம், நிகழ் காலம் மர்றும் எதிர்காலத்தை பார்த்து ரசிக்கும் அனுபவம் உண்மையில் விசித்திரமாகத் தெரிகிறது, ஆனால் அது உண்மை மேலும் நடந்துகொண்டுள்ளது. இதனை சாத்தியமாக்கியுள்ள விர்ச்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) எனப்படும் இந்த புதுயுக தொழில்நுட்பத்திற்கு நன்றி. வி.ஆர் என்பது கணினியால் உருவாக்கப்பட்ட சூழல், காட்சிகள் மற்றும் பொருள்கள் உண்மையானதாகத் தோன்றும் வகையில், பயனர்கள் தாங்கள் அந்த சூழலுக்கே நேரில் சென்ற அனுபவத்தை உணர வைக்கிறது.

தலைநகர் டெல்லியில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிரதம மந்திரி அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு இந்த அனுபவம் சாத்தியப்படுகிறது. அவர்கள் அங்குள்ள வி.ஆர் ஹெலிகாப்டரில் அமர்ந்துகொண்டு தோலேரா ஸ்மார்ட் சிட்டி, தோலா சாடியா பாலம், செனாப் பாலம் மற்றும் அடல் சுரங்கப்பாதை மற்றும் ஜோஜிலா சுரங்கப்பாதை வழியாக வேகமாக பறந்து செல்லலாம். மேலும், வரவிருக்கும் பாரதத்தின் முதல் அதிவேக ரயில் பாதையான மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் மற்றும் 680 மெகாவாட் பட்லா சோலார் பூங்கா ஆகியவற்றையும் கண்டு ரசிக்கலாம்.

அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த வி.ஆர் ஹெலிகாப்டர் சவாரி தவிர, அருங்காட்சியகத்தில் மக்கள் தங்களுக்குப் பிடித்த பிரதம மந்திரிகளுடன் செல்ஃபி எடுக்கவும், அவர்களுடன் மெய்நிகர் நடைப்பயிற்சி செய்யவும் அனுமதிக்கும் கருவிகளும் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு, பாரதத்தின் அணுசக்தி பயணத்தை விவரிக்கும் ஒரு மெய்நிகர் நேர இயந்திரம் மற்றும் பார்வையாளர்களின் விருப்பமான பிரதமரின் கடிதத்தை அவர்களின் கையெழுத்தில் தனிப்பயனாக்க ஒரு தானியங்கி பேனா உள்ளது.  பொக்ரான் சோதனைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தனி அறையும் உள்ளது. அங்கு அணு குண்டுவெடிப்பை சித்தரிக்கும் வகையில் நிலம் நடுங்குகிறது,  காந்தப்புலத்தின் காரணமாக சிலைகளை காற்றில் மிதக்கின்றன. பார்வையாளர் முன்னோக்கிச் செல்லும்போது, ​​மேலே அசையும் பிரம்மாண்ட கொடியைக் காணலாம். இது 1,200 ஒத்திசைக்கப்பட்ட விளக்குகளால் உருவாக்கப்பட்ட அழகிய கொடியாகும்.

இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா தொடங்கி கடந்த இரண்டு மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர். இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அருங்காட்சியகம் அனைத்து 14 பிரதமர்களின் பதவிக்காலம் மட்டுமல்ல, சுதந்திரத்தின் போது பாரதத்தின் வரலாறு மற்றும் சூழ்நிலையையும், பாரதத்தின் எதிர்காலத்தையும் நினைவுபடுத்துகிறது. மேலும், இந்த அருங்காட்சியகம் ஆடியோ விஷுவல் திரைப்பட உள்ளடக்கம், கிராஃபிக் பேனல்கள், தனிப்பட்ட பொருள்கள், காப்பக கடிதங்கள், ஆவணங்கள், டிஜிட்டல் பேனல்கள், கலை ஒருங்கிணைந்த காட்சியியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்த ஊடாடும் காட்சிகள் ஆகியவற்றின் சிறந்த சமநிலையை பராமரிக்கிறது. ‘செங்கோட்டையின் சுவர்களில் இருந்து’ என்ற கண்காட்சியின் மூலம், பார்வையாளர்கள் ஒரு நேரடி உணர்வைப் பெறலாம் என்பதுடன் வரலாற்றுக் கதைகளையும் காணலாம்.

பிரதமர்களின் கேலரிகள் அவர்களின் ஆரம்பகால வாழ்க்கை, அரசியல் பயணம், பிரதமர் பதவியை உருவாக்குதல், அவர்களின் பதவி காலத்தில் குறிப்பிடத்தக்க பணிகள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், ஓய்வு, கடைசி கட்டம் மற்றும் மறைவு என ஐந்து முதல் ஆறு தலைப்புகளாக இவை பிரிக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில், 75 ஆண்டுகளுக்கு அப்பால், வரவிருக்கும் காலங்களில் பாரதத்தின் எதிர்காலத்தை இந்த பயணத்தில் அனுபவிப்பதே இதன் முக்கிய யோசனை என்று டேக்பின் தலைமை செயல் அதிகாரி சௌரவ் பாய் கூறினார்.