19 வயது கல்லூரி மாணவி ரிச்சா பாரதி, கடந்த 2019ல் “மற்ற மதத்தினர் பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர் ஆனால் காஷ்மீர் பண்டிட்டுகள் இனப்படுகொலைக்குப் பிறகும் ஏன் ஆயுதங்களை எடுக்கவில்லை” என்று ஒரு முகநூல் பதிவை பகர்ந்தார். இதனால் ஜார்க்கண்ட் போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டார். குர்ஆனின் ஐந்து பிரதிகள் விநியோகித்தால் மட்டுமே அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் என்று ராஞ்சி நீதிமன்றம் அவருக்கு ஒரு வினோதமான தீர்ப்பளித்தது. நான் சிறை செல்வேனே தவிர குர்ஆன் வழங்க மாட்டேன் என துணிச்சலாக கூறினார் ரிச்சா பாரதி. இது பாரதம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் அவரது தந்தையை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால சுட்டுக் கொன்று கிணற்றில் வீசியுள்ளனர். காவல்துறை இதனை விசாரித்து வருகிறது.