மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தினமும் அம்மாநில மக்களுக்கு எதிராக அரங்கேற்றும் அட்டூழியங்களுக்குக் அளவே இல்லை. அவ்வகையில், கடந்த 2015ல் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜியை ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சியில் அறைந்த தேவசிஷ் ஆச்சார்யா என்பவர், இரு தினங்களுக்கு முன், மர்மமான முறையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். அவரது குடும்பத்தினர் அதனை கொலை என்று குற்றம் சாட்டுகின்றனர். 2015ல் அச்சம்பவம் நடைபெற்றதையடுத்து அங்கேயே அவரை திருணமூல் கட்சி குண்டர்கள் மிகக் கொடூரமாக தாக்கினர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். கடந்த 2020ல் தேவசிஷ் ஆச்சார்யா பா.ஜ.கவில் இணைந்தார். இதனால் இது திருணமூல் கட்சியின் பழிவாங்கல் நடவடிக்கையாகவே மக்களால் கருதப்படுகிறது.