பாலஸ்தீனிய ஹமாஸ் பயங்கரவாதிகள், தெற்கு இஸ்ரேல் பகுதியில் வெடிபொருட்கள் கொண்ட பலூன்களை அனுப்பி தாக்கியதை அடுத்து, நேற்று காசா பகுதியில் இஸ்ரேலிய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தி தக்க பதிலடி கொடுத்தது. மேலும், பாலஸ்தீனத்தில் இருந்து வரும் எந்த தாக்குதல்களையும் எதிர்கொள்ளவும் தக்க பதிலடி தரவும் தயாராக உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.