1857ம் ஆண்டு நடைபெற்ற முதல் சுதந்திரப் போர் நிகழ்வுகளில் பங்கேற்றவர்களின் தலைசிறந்த வீரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “1857-ஆம் ஆண்டு இதே நாளில் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சுதந்திரப் போர், நமது சக குடிமக்களிடையே தேசப்பற்று உணர்வை மூட்டியதுடன், காலனிய ஆட்சியின் சரிவிற்கும் வழிவகுத்தது. 1857ம் ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவரின் தலைசிறந்த வீரத்திற்கு நான் மரியாதை செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.