லட்சத்தீவின் நிர்வாகியான பிரபுல் படேலை திரும்ப அழைப்பதற்கான தீர்மானத்தை கேரள சட்டமன்றம் கடந்த திங்களன்று ஒருமனதாக நிறைவேற்றியது.இந்த பிரச்சினையில் மத்திய அரசின் தலையீட்டையும் கோரியது.கேரளாவின் ஆளும் கட்சியான சி.பி.எம் தொடர்ந்து முஸ்லிம்களை திருப்திப்படுத்த முயற்சித்து வருகிறது. அதற்காகவே, சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டங்களை தேவையே இன்றி கடுமையாக எதிர்ப்பது, சிறுபான்மையினருக்கான நிதி ஒடுக்கீட்டில் 80 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே ஒதுக்குவது என பல்வேறு நாடகங்களை அறங்கேற்றி வருகிறது. லட்சத்தீவு மீதான அக்கறையும் அதில் ஒன்றுதான்.அக்கட்சி லட்சத்தீவில் இல்லவே இல்லை என்பதும் ஒரு மாநிலம் மற்றொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேச விஷயத்தில் தலையிடுவது முறையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.லட்சத்தீவில் 93 சதவீதம் முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர்.லட்சத்தீவு பாரத அரசின் பதுகாப்பு விஷயத்தில் முக்கிய கேந்திரமாக உள்ள இடம்.ஆனால் இங்கு, போதைப்பொருள் கடத்தல், ஆயுதக்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அன்றாடம் நடைபெற்று வருகிறது. இது குறித்த அனைத்து விஷயங்கள் தெரிந்திருந்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல், தமிழகத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள், கமலஹாசன், சீமான் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களும் ஒருசேர லட்சத்தீவு பிரச்சனையில் குரல் கொடுத்து வருகின்றனர். இதன் பின்னணியில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பது மக்களால் ஊகிக்க முடியாததல்ல.