கடந்த சில நாட்களாக வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கிரிப்டோ கரன்சி எனும் மெய்நிகர் நாணய பயன்பாடு குறித்த மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து வீளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, கடந்த 2020 மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்றம், ரிசர்வ் வங்கியின் 2018ம் ஆண்டு சுற்றறிக்கைக்கு தடை விதித்ததால் வங்கிகள் அந்த சுற்றறிக்கையை மேற்கோள் காட்ட முடியாது என தெரிவித்துள்ளது. எனினும், வங்கிகளும் நிதி நிறுவனங்களும், தங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவமான கே.ஒய்.சி, பணமோசடி தடுப்பு (ஏ.எம்.எல்), நிதி பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகள் (சி.எஃப்.டி) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (பி.எம்.எல்.ஏ), வெளிநாட்டுக்கு பணம் அனுப்புவது பெறுவதற்கான அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (ஃபெமா) போன்றவற்றின் கீழ் செயல்முறைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். இந்த சட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்கள், விதிமுறைகள் உட்பட்டு செயல்படுவதை உறுதிசெய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.