மே 2, 2021 முதல் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தேர்தலுக்கு பின்பாக பல்வேறு வன்முறைகள் நடைபெற்றன. இந்த வன்முறைகள் குறித்து விசாரிக்க நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரனைக் குழு (எஸ்.ஐ.டி) அமைக்க வேண்டும் என நீதிக்கான ஹிந்து முன்னணி என்ற அமைப்பின் சார்பில் ரஞ்சனா அக்னிஹோத்ரி, ஜிதேந்திர சிங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி வினீத் சரண் தலைமையிலான பெஞ்ச், இது குறித்து பதில் அளிக்க மத்திய அரசு, திருணமூல் காங்கிரஸ் தலைமையிலான மேற்கு வங்க அரசு , இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பியது.