அசாமின் தராங் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வங்க தேசத்தவர்கள் குடியேறுவதற்கு பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) என்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பினர் உதவி வருகின்றனர். அவர்களை அகற்ற முயன்ற போது அதற்குத் தடை செய்கின்றனர். கலவரத்தை தூண்டுகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக தராங் மாவட்டத்திற்கு பி.எப்.ஐ உறுப்பினர்கள் சென்றுள்ளனர். இதுகுறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். பி.எப்.ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும்.’ என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கூறினார். முதல்வரின் இந்த குற்றச்சாட்டுக்கு வழக்கம்போல பி.எப்.ஐ நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர்.