கண்டிக்கத்தக்க கைதுகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தின் முன் காங்கிரஸ் கட்சியினர் அராஜக வழியில் செயல்பட்டு, வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அராஜகத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் குண்டர்களையும் வன்முறை செய்வதற்காக அவர்கள் கூலிக்கு அழைத்து வந்த ஆட்களையும் கைது செய்யாத தமிழக காவல்துறை, வேண்டுமென்றே இச்சம்பவம் தொடர்பாக பா.ஜ.கவினரை கைது செய்து வருகிறது. இதனை கண்டித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தனது சமூக ஊடகப்பதிவில், “கன்னியாகுமரி தமிழக பா.ஜ.க மாவட்டத் தலைவர் தர்மராஜ், திருநெல்வேலி முன்னாள் மாவட்டத் தலைவர் மகாராஜன், மற்றும் பா.ஜ.க தொண்டர்களையும் கைது செய்துள்ள தமிழக காவல்துறை அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க அலுவலகத்தைத் தாக்கிய ஜனநாயக விரோதிகளைக் கைது செய்வதை விட்டுவிட்டு, அவசர கதியில் பா.ஜ.கவினரைக் கைது செய்வது யாரைத் திருப்தி படுத்துவதற்காக? காவல்துறையை ஏவல்துறையாக முழுவதுமாக மாற்றியிருக்கும் திறனற்ற தி.மு.க, நாளொரு கொலை நடந்து மாநிலமெங்கும் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க தலைவர்களையும் தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.