பொதுக்குழுவின் அறிக்கை

கூட்டத்தின் முதல் நாளில், ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, ஆர். எஸ். எஸ்ஸின் அகில பாரத  பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார். நாடு முழுவதையும் 911 மாவட்டங்களாக ஆர்.எஸ்.எஸ்., பிரித்துள்ளது. அதில் 901 மாவட்டங்களில் 6,663 ஊராட்சி ஒன்றியங்களில், 88 சதவீத இடங்களில் பணிகள் நடக்கின்றன. ஊராட்சி ஒன்றியங்களை 59 ஆயிரத்து 326 மண்டல்களாக, ஆர்.எஸ்.எஸ்., பிரித்துள்ளது. அதில், 26 ஆயிரத்து 498 மண்டல்களில், அமைப்பின் வேலைகள் நடக்கின்றன. தற்போது நாடெங்கும் 68 ஆயிரத்து 651 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இது, கடந்த ஆண்டை விட, 8,534 அதிகம். ‘மிலன்’ எனப்படும் வாராந்திர சந்திப்புகள், 26 ஆயிரத்து 877 நடக்கின்றன. இது கடந்த ஆண்டை விட, 6,057 கூடுதல். 10 ஆயிரத்து 412 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர சந்திப்புகள் நடக்கின்றன. இது, கடந்த ஆண்டைவிட, 2,432 அதிகம். கடந்த 2017 முதல் 2022 வரை – ஜாயின் ஆர்.எஸ்.எஸ்., – என்ற டிஜிட்டல் ஊடகம் மூலம்  அமைப்பில்   7.25 லட்சம் பேர் சேர்ந்து உள்ளார்கள். இந்த விண்ணப்பதாரர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்,  சமூகத்திற்கு சேவை செய்யும் நோக்கத்துடன் ஆர்எஸ்எஸ்ஸில் சேர விரும்புகின்றனர் என்றார்.