சித்தார்த்துக்கு பதிலடி

கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் எனது வயதான பெற்றோர்களை சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் 20 நிமிடம் துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்ஸிள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இது தொடர்பாக சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக உடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், “சித்தார்த் அவர்களே, நீங்கள் மதுரை விமான நிலையத்தில் உங்கள் பெற்றோரை ஹிந்தியில் பேச வேண்டும் என சி.ஆர்.பி.எப் வீரர்கள் துன்புறுத்தியதாகச் சொல்லியிருந்தீர்கள். முதலில் எங்களை ஆங்கிலத்தில் பேச வேண்டுமென சொல்வதற்கு நீங்கள் யார்? நாங்கள் என்ன வெள்ளைக்காரர்களா. பாரத மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை பேச சொல்லுங்கள் நாங்கள் பேசுகிறோம். அல்லது அங்கே ஒரு தமிழ் சி.ஆர்.பி.எப் அதிகாரி இருந்திருப்பார். அவரை அழைத்து தமிழில் பேசச்சொல்லி இருக்கலாம். இல்லை தெலுங்கு தெரியும் என்றால் தெலுங்கு அதிகாரி யாராவது இருப்பார் அவரிடம் பேசியிருக்கலாம். வேலையில்லாதவர்கள் துன்புறுத்துகிறார்கள் என கூறியுள்ளீர்கள். நீங்கள் அதிக வேலையாக உள்ளீர்களோ? திரையுலகில் நீங்கள் என்னென்ன அட்டகாசம் செய்தீர்கள் என்றும் யாருக்கும் தெரியாதா? பணியில் உள்ளவர்களிடம் கண்ணியமாக பேச வேண்டும் என்பதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். அது அவர்களின்ள் வேலை. சந்தேகத்தில் நிற்க வைத்தால் நின்றுதான் தீர வேண்டும். எங்கள் பணியிடத்தில் எங்களுக்கென்று ஒரு அதிகாரம் உண்டு. எங்களை எதற்கெடுத்தாலும் கூழை கும்பிடு போடும் அரசியல்வாதி என்று நினைத்தீர்களா? டிபார்ட்மெண்ட் பவர் என்றால் என்னெவென்று முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்க பெற்றோர் மட்டுமல்ல, பணியில் இருக்கும் வீரர்களின் பெற்றோர் வந்தாலும் கூட அவர்களின் கடமையை செய்துதான் தீர வேண்டும். அதேபோல எங்களை ஆங்கிலத்தில் பேச சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஹிந்தி தெரியவில்லை என்றால் ஹிந்தி தெரியாது என்று சொல்லிவிட்டு போகலாம். ஆங்கிலம் தெரியாது என்று சொல்வதற்கு நாங்கள் வெட்கப்பட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதை படிக்கும் அவசியமும் கிடையாது. நீங்கள் தான் வெளியூரில் வெள்ளைக்காரர்களுடன் சுற்றுபவர். அதனால் உங்களுக்கு தான் ஆங்கிலம் தெரிய வேண்டும். வார்த்தையை பார்த்து பயன்படுத்துங்கள். ஜெய்ஹிந்த்” என பேசியுள்ளார்.